சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில். இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். இந்த கோவிலில் தினமும் காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு சாத்தப்படும். இந்நிலையில், நாளை மறுதினம் 28 -10 -2023 (சனிக்கிழமை) பவுர்ணமி அன்று சந்திர கிரகணம் நிகழ உள்ளதால் அன்று பிற்பகல் 3 மணிக்கு விளக்கு பூஜை நடைபெற்று அதனைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு சாயரட்சை பூஜை முடிந்தவுடன் மாலை 6 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படும் என்று கோவில் இணை ஆணையர் கல்யாணி தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.