சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இந்த கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வருகை தந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகள் அவ்வப்போது திறந்து எண்ணப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று ( 19.10.2023 ) கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. கோவில் இணை ஆணையா் சி.கல்யாணி மேற்பார்வையில் அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் இந்தப் பணியில் ஈடுபட்டனா். முடிவில் ரூ.71 லட்சத்து 5 ஆயிரத்து 563 ரூபாய், 1 கிலோ 278 கிராம் தங்கம், 1 கிலோ 840 கிராம் வெள்ளி, 85 வெளிநாட்டு ரூபாய்கள், 508 வெளிநாட்டு நாணயங்கள் ஆகியவை கோவிலுக்கு வருவாயாக கிடைத்திருந்தன.
Comments are closed, but trackbacks and pingbacks are open.