சேலம், ஓமலூர் அருகே பரபரப்பு: அரசு பள்ளி ஆசிரியை படுகொலை..!
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கமலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியை ஸ்ரீவித்யா (38) படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலைச் சம்பவத்துக்குப் பிறகு தப்பிச் சென்ற அவரது கணவர் தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க ஓமலூர் போலீசார் தீவிர தேடுதல் நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தம்பதியிடையே நீண்ட நாட்களாக குடும்பத் தகராறு இருந்து வந்ததாகவும், அதன் காரணமாக ஸ்ரீவித்யா தனது தாய் வீட்டில் தங்கி பணியாற்றி வந்ததாகவும் தெரியவந்துள்ளது. இந்தக் கொலையில் வேறு தூண்டுதல்கள் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், ஓமலூர் டிஎஸ்பி சஞ்சீவ் குமார் தலைமையிலான போலீசார் பள்ளி வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். சம்பவ நேரத்தில் பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம் வாக்குமூலமும் பெறப்பட்டு வருகிறது. ஸ்ரீவித்யாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மெடிக்கல் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, வளாகம் முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த வழக்கில் ஸ்ரீவித்யாவின் கணவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 302 (கொலை வழக்கு) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது.

Comments are closed.