Rock Fort Times
Online News

ரேஷன் கடைகளில் பூண்டு, வெங்காயம் விற்பனை- தமிழக அரசுக்கு இ.கம்யூ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் யோசனை…!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இன்று(13-11-2024) திருச்சி வந்தார்.  பின்னர் அவர் உறையூர் சாலை ரோடு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவும், மூத்த தோழர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழாவும் டிசம்பர் 26 ந் தேதி அன்று தொடங்குகிறது. அதனை சிறப்பாக கொண்டாட உள்ளோம். மத்திய அரசு, பொது துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை தொடர்ந்து செய்து வருகிறது. பாதுகாப்பு துறைக்கு தேவையான தளவாட பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்படுகிறது. திருச்சி, சென்னை, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசு தனியார்மயமாக்கல் கொள்கையை கைவிட வேண்டும். மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. மத்திய அரசு, இதை தடுத்து நிறுத்த வேண்டும். மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் மிகப்பெரிய போராட்டங்கள் நடத்த வேண்டிய சூழல் ஏற்படும். பூண்டு, வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனை மாநில அரசு கவனத்தில் கொண்டு கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும். மாநகராட்சி, நகராட்சிகளில் சொத்து வரி பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கம்யூனிஸ்ட் இயக்கங்கள் ஒன்றுபட வேண்டும் என்பதை நூற்றாண்டு விழாவில் வலியுறுத்துவோம். எடப்பாடி பழனிசாமி கூட்டணி தொடர்பாக பா.ஜ.க விற்கும் துண்டு போட்டு வைத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி கருத்தை தமிழிசை வரவேற்பதன்மூலம் அவர்கள் ஒத்த கருத்தில் இருப்பது தெரிகிறது. கூட்டணியில் எந்த அதிருப்தியும் இல்லை. அதிருப்தி இருக்க வேண்டும் என சிலர் விரும்புகிறார்கள். எங்களது பலம் என்ன என்பது எங்களுக்கு தெரியும். எல்லா காலங்களிலும் அரசியல் விவாதம் நடந்து கொண்டு தாம் உள்ளது. விஜய் வந்த பிறகும் நடக்கிறது. இது புதிதல்ல. உலகில் சிறந்த கொள்கை சோசியலிசம் தான். அதை விடுத்து விஜய் பேசுகிறார். இவ்வாறு அவர் கூறினார். பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், மாநில நிர்வாகிகள் மற்றும் ஏஐடியுசி யின் மாவட்ட பொதுச் செயலாளர் சுரேஷ், நகர செயலாளர் சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பஞ்சப்பூரில் ரூ.17.60 கோடி மதிப்பில் புதிய ஆம்னி பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா

1 of 917

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்