Rock Fort Times
Online News

அரசு பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு…!

அரசு பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ரூ.500 முதல் ரூ.1,500 வரை ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 30,000 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பயன்பெறுவர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக ரேஷன் கடை ஊழியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் ஆகியோருக்கும் ஊதிய உயர்வு வழங்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்