திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் இணை ஆணையராக செ.சிவராம்குமார் இன்று( ஏப்ரல் 2) பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் முன்னாள் இணை ஆணையர் மாரியப்பன் பொறுப்புகளை ஒப்படைத்தார். இக்கோயிலில் ஏற்கெனவே ஒன்றரை ஆண்டுகளாக இணை ஆணையராக பணியாற்றி வந்த செ.மாரியப்பன் மதுரை மண்டல இணை ஆணையராக மாற்றப்பட்டார். புதிதாக பொறுப்பேற்று கொண்ட
செ.சிவராம்குமார் இதற்கு முன்பு ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் இணை ஆணையராக பணியாற்றினார். கடந்த 2023-ம் ஆண்டு ஜூன், ஜூலை ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் செ.சிவராம்குமார் ஸ்ரீரங்கம் கோவிலில் இணை ஆணையராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Comments are closed.