Rock Fort Times
Online News

லேபிளில் பிரிண்ட்டானதோ ரூ.65 ஸ்டிக்கரில் இருப்பதோ ரூ.75..இரண்டில் எது உண்மையான விலை? (வீடியோ இணைப்பு)

திருச்சி புத்தூர் கோவை பழமுதிர் நிலையத்தில் பகீர்...

திருச்சி புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை எதிரில் கோவை பழமுதிர் நிலையம் என்னும் சூப்பர் மார்க்கெட் இயங்கி வருகிறது. மருத்துவமனைக்கு எதிரே இது அமைந்திருப்பதால் நோயாளிகளுக்கு தேவையான பழங்கள், ப்ரஷ் ஜூஸ் போன்றவற்றை நோயாளிகளின் உறவினர்கள் வாங்கி வருகின்றனர். இந்நிலையில் இன்று (02.11.23) இங்கு பேக்கிங் செய்யப்பட்ட எள்ளு உருண்டை பாக்கெட் மற்றும் அன்னாசிப்பழம் ஆகியவற்றை வாடிக்கையாளர் ஒருவர் வாங்கியுள்ளார். அதில், அவர் வாங்கிய எள்ளு உருண்டை பாக்கெட்டின் மீது ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு எம்.ஆர்.பி விலை 75 என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் அந்த ஸ்டிக்கரை எடுத்துவிட்டு பார்த்தால் ஏற்கெனவே பிரிண்ட் செய்யப்பட்ட லேபிளில் எம்.ஆர்.பி விலை 65 ரூபாய் என பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது. இதில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர் மற்றும் விலை வித்தியாசம் குறித்து அங்கு வேலை பார்ப்பவர்களிடம் கேட்டால், சிவகாசியிலிருந்து மொத்தமாக லேபிள் பிரிண்ட் செய்து விடுவோம். லட்சக்கணக்கில் பிரிண்ட் செய்யப்படுவதால் அந்தந்த மார்க்கெட் நிலவரத்திற்கு ஏற்றபடி ரேட் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வோம் என்று கூறியுள்ளார். இது குறித்து திருச்சி மாவட்ட உணவுப்பாதுகப்புத்துறை நியமன அலுவலர் ரமேஷ் பாபுவிடம் நாம் கேட்டபோது, பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களின் மேல் இரண்டு லேபிள் ஒட்டி விற்கக்கூடாது. அது சட்டப்படி தவறு. நாங்கள் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மேல் உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என்றார்.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்