திருச்சி தெற்கு தாராநல்லூர் சிவசக்தி மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மகன் நந்தகுமார் (வயது 35). திருச்சி மாவட்டம் லால்குடி நன்னிமங்லத்தைச் சேர்ந்த ராஜேஷ் அவரது மனைவி பிரதீபா ஆகியோர் நந்தகுமாரை அணுகி ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியுள்ளனர். இதை நம்பிய நந்தகுமார் கணவன், மனைவி இருவரிடமும் ரூ.25 லட்சம் கொடுத்ததாக தெரிகிறது. ஆனால், அதற்கான லாபத் தொகையையும் கொடுக்கவில்லை, பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசில் நந்தகுமார் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுலோச்சனா, கணவன், மனைவி ஆகிய 2 பேர் மீதும் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.