Rock Fort Times
Online News

சாலை விபத்தில் உயிரிழந்த திருச்சி போலீஸ் ஏட்டு குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி…!

முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்...

திருச்சி அரியமங்கலம் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் ஸ்ரீதர் (வயது 45). இவர் கடந்த 30-ந் தேதி அரிஸ்டோ ரெயில்வே மேம்பாலத்தில் இரவு பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் கல்லூரி மாணவர் அகிலன்(20) மற்றும் அவரது நண்பர் மதன் பிரசாத் (19)  ஆகிய இரண்டு பேரும் சென்று கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து ஹெல்மெட் கீழே விழவே, அகிலன் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அந்த ஹெல்மெட்டை ஸ்ரீதர் எடுத்துக் கொடுக்க முயன்றபோது அந்த வழியாக வந்த கார் அவர் மீதும், அகிலன் உள்பட மூன்று பேர் மீதும் மோதியது. இதில் மூன்று பேரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் போலீஸ் ஏட்டு ஸ்ரீதர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், போலீஸ் ஏட்டு ஸ்ரீதரை இழந்து வாடும் குடும்பத்துக்கு ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்ததோடு, அவரது குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்தநிலையில் டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் முடிந்து சென்னை செல்வதற்காக நேற்று ( 27.08.2023 ) மதியம் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு வி.ஐ.பி. அறையில் போலீஸ் ஏட்டு ஸ்ரீதரின் மனைவி மற்றும் குழந்தைகளிடம் ரூ.25 லட்சத்துக்கான காசோலையை முதல்-அமைச்சர் வழங்கினார். அப்போது மாவட்ட ஆட்சியா்  மா.பிரதீப் குமார் ஐஏஎஸ் , மாநகர போலீஸ் கமிஷனர் என். காமினி ஐபிஎஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்