திருச்சியை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் ரொட்டேரியன் ட்ரிபிள் எம்.முருகானந்தம். இவர் தனது எக்ஸெல் குரூப் ஆஃப் கம்பெனிஸ் மூலம் உலக அளவில் பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். 2025 – 26ம் ஆண்டுக்கான ரோட்டரி அமைப்பின் இன்டர்நேஷனல் டைரக்டர் ஆக பதவி வகித்து வரும் இவர், தனது திருமண நாளை முன்னிட்டு போலியோ ஒழிப்பிற்காக 25 ஆயிரம் அமெரிக்க டாலர்களை நிதி வழங்குவதாக உறுதி ஏற்றுள்ளார். இதன் இந்திய மதிப்பு சுமார் 22 லட்சத்து 50 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது. இதையொட்டி ரோட்டரி அமைப்பை சேர்ந்த பல்வேறு நிர்வாகிகளும், தொழில் அதிபர்களும், இவரை பாராட்டி வருகின்றனர்.

Comments are closed.