Rock Fort Times
Online News

சிவகங்கையில் அரசு பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம்…* பிரதமர் மோடி அறிவிப்பு!

சிவகங்கையில் நேற்று(நவ.30) அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பிரதமர் நரேந்திர மோடி இந்த விபத்து வேதனை அளிக்கிறது என தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார் அருகே கும்மங்குடியில் இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் டிரைவர், 9 பெண்கள் உட்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 40 பேர் பலத்த காயமுற்று அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தின் சிவகங்கையில் நிகழ்ந்த விபத்தில் நேரிட்ட உயிரிழப்புகள் மிகுந்த வேதனை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். ஏற்கனவே விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு, தலா 3 லட்சம், பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு, தலா ஒரு லட்சம், லேசான காயமடைந்து, சிகிச்சை பெறுவோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய், முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்