திருச்சி இ.பி.காலனி சமுதாய கூடத்தில் ரூ.10 லட்சத்தில் உணவுக்கூடம் !
திருநாவுக்கரசர் எம்.பி திறந்து வைத்தார்!
திருச்சி மாநகராட்சி 60-வது வார்டுக்கு உட்பட்ட காஜாமலை இ.பி. காலனியில் சமுதாய கூடம் உள்ளது. இந்த சமுதாய கூட வளாகத்தில் புதிதாக திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்பில் சமையல் அறை மற்றும் சாப்பாட்டு கூட கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு சமையல் அறை மற்றும் சாப்பாட்டு கூட கட்டிடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் எல்.வி. ரெக்ஸ், வக்கீல் கோவிந்தராஜன், மகிளா காங்கிரஸ் ஷீலாசெலஸ், கோகிலா, அண்ணாதுரை, அன்னை புரமோட்டர்ஸ் வினோத் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.