திருச்சி ராம்ஜிநகர் மில் காலனி மூன்றாவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜெய் என்கிற ஜானகிராமன் வயது 45. இவர் ராம்ஜி நகர் மில் காலனி மாரியம்மன் கோவில் பின்புறம் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜு சம்பவ இடம் விரைந்தார் .அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த ஜானகிராமனை கைது செய்தார் .அவரிடம் இருந்து 2 கிலோ 450 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு ரூபாய் 24 ஆயிரத்து 500 ஆகும். கைதான ஜானகிராமன் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளதாக எடமலைப்பட்டிபுதூர் போலீசார் தெரிவித்தனர்.