திருச்சிராப்பள்ளி மிட்டவுண் ரோட்டரி கிளப், மதுரை மிட் டவுண் ரோட்டரி கிளப், திண்டுக்கல் மிட்டவுண் ரோட்டரி கிளப் மற்றும் புதுக்கோட்டை மிட்டவுண் ரோட்டரி கிளப் ஆகியவை இணைந்து ‘வாங்க பழகலாம்’ என்ற ஒரு மிகச் சிறப்பான இணை கிளப் கூட்டம் திருச்சி மிட் டவுண் ரோட்டரி தலைவர் எஸ். முத்துக்குமாரவேல், மதுரை மிட்டவுண் ரோட்டரி கிளப் தலைவர் ஆர். எஸ்.ரத்னராஜ், திண்டுக்கல் மிட் டவுண் ரோட்டரி கிளப் தலைவர் எம்.சிவா சிதம்பரம் ஆகிய மூன்று கிளப் தலைவர்களின் பெரு முயற்சியால் சிறப்பான முறையில் திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஜே. கார்த்திக் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்தக் கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த கூட்டு மிட்டவுண் கூட்டத்தின் முதன்மை நோக்கம், மாவட்டம் 3000-ல் உள்ள அனைத்து மிட்டவுண் ரோட்டரி உறுப்பினர்களும் பரஸ்பரம் அறிமுகமாகி, கிளப்புகளுக்கிடையேயான நெருக்கத்தை வலுப்படுத்துவதும், சமூகத்திற்கு தேவையான சிறந்த சேவைகளை செய்வதற்கு வழிவகுப்பதுமாகும். வரவிருக்கும் மாதங்களில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள இணை மிட்டவுண் சேவை திட்ட அறிவிப்புகளை செயல்படுத்த வேண்டும் என்பதே சிறப்பம்சமாக இருந்தது.
இந்தக் கூட்டத்தில் மேலும் ஒரு முக்கிய நிகழ்வாக மாவட்ட ஆளுநர் முன்னிலையில் மூன்று புதிய ரொட்டேரியன்கள் திருச்சி ஹரிணி ஜூவல்லர்ஸ் நிர்வாக இயக்குனர் ரொட்டேரியன் எஸ்.ராம்குமார், ரெட் எக்ஸ்பிரஸ் ரொட்டேரியன் சங்கீத்ராஜன், ஆதவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ரொட்டேரியன் உலகநாதன் ஆகியோர் தங்களது சிறந்த சேவையை வழங்குவதற்காக மிட் டவுண் ரோட்டரி கிளப்பில் இணைந்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் மூத்த உறுப்பினர்கள் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இணை மிட்டவுண் கூட்டங்களின் இனிய நினைவுகளையும், தாங்கள் செய்த சேவைகளயும் பகிர்ந்தனர். இது அனைவருக்கும் புதிய உத்வேகத்தை உருவாக்கும் விதமாக அமைந்தது. இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை 3 கிளப் தலைவர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

Comments are closed.