ரோட்டரி கிளப் திருச்சிராப்பள்ளி மிட்டவுன் சார்பில் புலியூரில் உள்ள 36 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் தூர்வாரி சீரமைப்பு…! * பொதுமக்கள் பாராட்டு
திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஒன்றியம், புலியூர் ஊராட்சியில் 36 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரியகுளம் ஒன்று உள்ளது. இந்தக் குளம் புதர் மண்டி பொதுமக்கள் பயன்பாடு இன்றி கிடந்தது. இந்த குளத்தை தூர்வாரி சீரமைக்க, ரோட்டரி கிளப் திருச்சிராப்பள்ளி மிட்டவுன் முடிவு செய்தது.
இதற்கான பணிகள் 29- 04-2025 அன்று விறுவிறுப்பாக நடந்தது. பல்வேறு தொழிலாளர்கள் மூலம் குளத்தில் உள்ள முட்புதர்கள் அகற்றப்பட்டு, கரைகளை அகலப்படுத்தி, குளத்தை சுற்றி மரக்கன்றுகள் நட்டு, சுற்றுச்சூழலுக்கு பயனுள்ள முறையில் குளம் மேம்படுத்தப்பட்டு ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில் ரோட்டரி 3000 மாவட்ட ஆளுநர் ராஜா கோவிந்தசாமி பங்கேற்று குளம் தூர் வாரப்பட்டதற்கான கல்வெட்டினை திறந்து வைத்தார். நிகழ்வில், ரோட்டரி முன்னாள் ஆளுநர்கள் குணசேகரன், டாக்டர் ஜமீர்பாஷா, தில்லை மனோகரன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
மேலும், முன்னாள் புலியூர் கவுன்சிலரும், ரோட்டரி மிட்டவுன் சங்கத் தலைவருமாகிய ராமதாஸ், செயலாளர் சீனிவாசன், பொருளாளர் ரவிச்சந்திரன், திட்டத் தலைவர் லோகேஷ்பாபு, திருநாவுக்கரசு மற்றும் சங்க உறுப்பினர்கள் விழாவில் கலந்து கொண்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எவ்வளவோ ரோட்டரி சங்கங்கள் இருந்தாலும் ரோட்டரி கிளப் திருச்சிராப்பள்ளி மிட்டவுன் பெரு முயற்சி எடுத்து குளத்தை தூர்வாரி சீரமைத்து கொடுத்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினர்.
Comments are closed.