“ரோல் மாடல்”அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி – முனைவர் பட்டம் பெற்றவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
திருச்சி தெற்கு மாவட்ட கழக திமுக செயலாளர் – தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என கட்சிப் பொறுப்பிலும், ஆட்சிப் பொறுப்பிலும் திறம்பட செயலாற்றி வருகிற அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உடற்கல்வி இயந்திரக் கற்றல் வழியாக பள்ளி மாணவர்களுக்கு ‘திறன்மிகு கற்றல்’ என்ற தலைப்பில் மேற்கொண்ட ஆய்விற்காக முனைவர் பட்டம் பெற்றார். நேற்றைய தினம் (நவ.17) திருச்சி தேசிய கல்லூரியில் நடைபெற்ற விழாவில், முனைவர் பட்டம் பெற்றதற்கான சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட்டது. இதையொட்டி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவரை பாராட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் வாழ்த்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், என் நண்பனின் இடத்திலிருந்து பெருமையுடன் மகிழ்கிறேன். முனைவர் பட்டம் பெற்றுள்ள தம்பி அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வாழ்த்துக்கள். கல்வியே நமது உயர்வுக்கான வழி. அதிலும் ஆராய்ச்சி படிப்பு வரை நமது தமிழ்நாட்டு மாணவர்கள் முன்னேற வேண்டும் என்ற எனது சொல்லை, எனது அமைச்சரவையிலும், குடும்பத்திலும் இருந்து கடைப்பிடித்திருக்கிறார் அன்பில் மகேஷ். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், மாவட்டக்கழக செயலாளர் ஆகிய பொறுப்புகளில் திறம்பட செயலாற்றி கொண்டே முனைவர் பட்டம் பெற்றுள்ள அவர் பணிச்சுமை – நேரமின்மை – வயது ஆகியவற்றை கடந்து கல்விபெறத் துடிக்கும் அனைவருக்கும் ரோல் மாடலாகி விட்டார் என பெருமைப்பட தெரிவித்துள்ளார்.

Comments are closed.