Rock Fort Times
Online News

அமெரிக்காவில் நடைபெற்ற ரோபோட்டிக்ஸ் ஒலிம்பியாட் போட்டி…* சாதனை படைத்த தமிழ்நாட்டு மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விருது வழங்கி பாராட்டு..!

அமெரிக்க நாடான பனாமா நகரில், அக்டோபர் 19 முதல் 21 வரை உலக ரோபோட்டிக்ஸ் ஒலிம்பியாட் (World Robotics Olympiad) போட்டி நடைபெற்றது. உலகம் முழுவதுமிருந்து 25-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பலர் இதில் பங்கேற்றனர். அந்த வகையில், சென்னை பொன்னேரி வேலம்மாள் சர்வதேச பள்ளியில் பயிலும் பிளஸ்–1 மாணவர்கள் அவிவ், அஞ்சனாதேவி, பவித்ரா ஆகியோர் தங்கள் சிந்தனை திறன், தொழில்நுட்ப அறிவு, குழு ஒருமைப்பாடு ஆகியவற்றின் மூலம் இப்போட்டியில் மூன்றாம் இடம் பெற்றனர். இந்த வெற்றியைத் தொடர்ந்து, உலகளவில் நடைபெற்ற ரோபோட்டிக்ஸ் ஒலிம்பியாட் போட்டியில் சிறப்பாகப் பதக்கம் பெற்ற மாணவர்களை, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் நேரில் அழைத்து விருது வழங்கி பாராட்டியுள்ளார். மேலும், மாணவர்களுக்கு இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஏரோநாட்டிக்ஸ், ஆஸ்ட்ரோனாட்டிக்ஸ் அண்ட் ஏவியேஷன் (Institute of Aeronautics, Astronautics and Aviation – IAAA) என்ற தொழில்முறை சங்கம் சார்பில் “குளோபல் இன்னோவேட்டிவ் சாம்பியன்ஸ் (Global Innovative Champions)” என்ற விருதும், அத்துடன் ரூ.1 இலட்சம் மதிப்புள்ள ஸ்டார்ட்அப் வழிகாட்டுதலுக்கான (Startup Mentorship Support) உதவியும் வழங்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்