Rock Fort Times
Online News

திருச்சியில் ஓட்டல் உரிமையாளரிடம் பணம், நகை பறிப்பு: பயங்கர ஆயுதங்களுடன் 3 ரவுடிகள் கைது…!

திருச்சி, அரியமங்கலம் கணபதி நகர் 3 -வது தெருவை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவரது மகன் மாரிமுத்து (33). இவர், அப்பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் அரியமங்கலம் தொழிற்சாலை பகுதியில் நடந்த சென்று கொண்டிருந்தார். அப்போது விலை உயர்ந்த பைக்கில் குடிபோதையில் வந்த மூன்று ரவுடிகள், இவரை மிரட்டி பணம், கையில் அணிந்திருந்த பிரேஸ்லெட் ஆகியவற்றை பறித்து சென்றனர். இதுகுறித்து அரியமங்கலம் போலீசில் மாரிமுத்து கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வரகனேரி ஆனந்தபுரம் மேட்டு தெருவை சேர்ந்த முகமது முபாரக் (32), அரியமங்கலம் மேல அம்பிகாபுரத்தைச் சேர்ந்த லோகு என்கிற லோகநாதன் (31), அரியமங்கலம் மேல அம்பிகா புரத்தைச் சேர்ந்த தினேஷ் என்கிற கூல் தினேஷ் (26) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பெரிய வாள், கோடாரி, மிளகாய் தூள், ஸ்பிரே பாட்டில், ப்ரேஸ்லெட், அதி நவீன பைக், பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட மூவரும் ரவுடிகள் பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்