Rock Fort Times
Online News

வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்….

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரின் ஊழியர் விரோத போக்கினை கண்டித்தும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினரின் அரசியல் தலையீட்டினை கண்டித்தும், கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் மனோஜ் முனியன் பணி இடை நீக்கத்தினை ரத்து செய்ய கோரியும், இன்று  ( 30.08.2023 ) திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பிரேம்குமார் கோரிக்கைகளை விளக்கி கூறினார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில துணை தலைவர் பெரியசாமி மற்றும் மாவட்ட தலைவர் பால்பாண்டி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில், சங்கத்தைச் சேர்ந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்