களப்பணியில் ஈடுபடும் அலுவலர்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்பட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை மற்றும் நில அளவைத் துறை அலுவலர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், திருச்சியில் இன்று( மார்ச் 5) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், நூற்றுக்கணக்கான ஊழியர்களை கைது செய்தனர்.

Comments are closed.