Rock Fort Times
Online News

கரூாில் லஞ்சம் வாங்கிய வருவாய் உதவியாளா் கைது.

கரூர் மாநகராட்சியில் வருவாய் உதவியாளராக பணிபுாிந்து வரும் ரவிச்சந்திரன்,மாநகராட்சிக்குட்பட்ட 14 வது வார்டு பகுதிக்கு வரி வசூல் செய்யும் அதிகாரியாக உள்ளாா். தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த ஒருவரது வீட்டு வரி நிர்ணயத்திற்காக 20 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத அவர் இது குறித்து கரூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினாிடம் தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வருவாய் உதவியாளரான ரவிச்சந்திரன், காந்திகிராமம் பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் லஞ்சப் பணத்தை வாங்கும் போது, லஞ்ச ஒழிப்பு காவல்துறை டிஎஸ்பி நடராஜன் மற்றும் ஆய்வாளர் சாமிநாதன் தலைமையிலான கரூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினாிடம் பிடிபட்டுள்ளாா். அவரை கைது செய்த காவல்துறையினா், ரவிச்சந்திரனுக்கு உடந்தையாக இருந்த டீக்கடை உரிமையாளர் பாலாஜி என்பவரிடமும் ஆறு பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் மாநகராட்சி ஊழியர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்