Rock Fort Times
Online News

தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் திருச்சியில் ஒன்றாக சந்திப்பு … * மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்!

தமிழ்நாடு காவல்துறையில் 1981 மற்றும் 1982 வது ஆண்டு பணியில் சேர்ந்து ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகள் ஒரு நாளில் ஒன்றாக சந்தித்து வருகின்றனர். அந்தவகையில் நான்காம் ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் இன்று( மார்ச் 19) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருச்சி, மதுரை, சென்னை, கோயம்புத்தூர், விழுப்புரம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவியும், கைகுலுக்கியும் வரவேற்று மகிழ்ந்ததோடு ஒன்றாக அமர்ந்து தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்வில் ஓய்வு பெற்ற உதவி போலீஸ் கமிஷனர்கள் சுந்தரமூர்த்தி, வீரமணி, கண்ணதாசன், மகாதேவன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். பல போலீஸ் அதிகாரிகள் தங்களது குடும்பத்தினரோடு கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப் பட்டனர். நிகழ்ச்சிக்கு முன்னதாக மறைந்த 30 ஓய்வு பெற்ற போலீசாருக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளார்களாக ராஜு, ரவிச்சந்திரன், முத்துசாமி, பொன்மலை இளங்கோவன், வேதமூர்த்தி, சந்திரன், ஸ்ரீரங்கம் இளங்கோவன், ஜோசப், ராமானுஜம், பாஸ்கர், சாமிநாதன் ஆகியோர் செயல்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் பிரியா விடை பெற்று தங்களது ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்