பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இந்திய ரிசர்வ் வங்கியால் திரும்ப பெறப்பட்டது. இதற்கான கால அவகாசம் 2023 அக்டோபர் 7ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், 6 ஆயிரத்து 266 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இன்னும் வங்கிகளுக்கு திரும்பாமல் உள்ளது. எனவே, யாரிடமாவது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தால் சென்னை, பெங்களூரு, அகமதாபாத் உள்ளிட்ட ரிசர்வ் வங்கியின் அலுவலகங்களிலோ, அல்லது ரிசர்வ் வங்கி மூலம் பேங்க் அக்கவுண்டிலோ டெபாசிட் செய்து கொள்ளலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Comments are closed.