திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவரங்கபட்டி கிராமத்தில் துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு அழிஞ்சிகரை, கீழகொட்டம் ஆகிய பகுதிகளில் இருந்து 50- க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு மதிய உணவு சமைப்பதற்கு தண்ணீர் இல்லாமல் கடந்த 20 நாட்களாக அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால், சத்துணவு சமைப்பதற்கு 5-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் மற்றும் சமையல் செய்யும் ஆயாக்கள் அரை கிலோமீட்டர் தூரம் சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். மேலும், பள்ளியில் போதிய குடிநீர் வசதி இல்லாததால் மாணவ-மாணவிகள் மதிய வேளையில் குடிநீருக்கு வீடு, வீடாக சென்று தண்ணீர் கேட்டு குடிக்கும் அவலநிலை ஏற்படுகிறது. ஆகவே, இந்த பள்ளிக்கு போதிய அளவு குடிநீர் வசதி செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.