மதுரையில் வைக்கப்பட்டுள்ள பேனர், கொடிக்கம்பங்களை ஒரு மணி நேரத்திற்குள் அகற்றுங்கள்…* போலீஸ் கமிஷனருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
மதுரையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள், கொடிக்கம்பங்களை ஒரு மணி நேரத்தில் அகற்றி தகவல் தெரிவிக்க மாநகர போலீஸ் கமிஷனருக்கு
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையில் பல்வேறு இடங்களில் அனுமதி இன்றி பேனர்கள் மற்றும் கொடிக்கம்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. உள்ளாட்சி அமைப்புகளின் விதிமுறைகளையோ, நீதிமன்றங்களின் உத்தரவுகளையோ யாரும் பொருட்படுத்துவதில்லை. போக்குவரத்து மிகுந்த நெடுஞ்சாலைகளில், விளம்பர போர்டுகள் வைப்பது தொடர்கிறது. இதுதொடர்பாக, தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு ஒன்றை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, ‘அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சட்டவிரோத பேனர்கள் மற்றும் பிளக்ஸ் போர்டுகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி அனைத்து பேனர்கள், கொடிக் கம்பங்களை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய ஒரு மணி நேரம் மாநகராட்சி போலீஸ் கமிஷனருக்கு அவகாசம் வழங்கியது. அதோடு ‘மதுரையில் தற்போது ஏராளமான கொடிக் கம்பங்கள், பேனர்கள் உள்ளன. நேரில் ஆய்வு செய்ய நாங்கள் தயார்’ என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மதுரையில் நாளை (ஆகஸ்ட் 21) தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெறுவதால் விஜயை வரவேற்று பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.