Rock Fort Times
Online News

தங்க நகைக்கடன் விதிமுறைகளுக்கு தளர்வு…- ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதி அமைச்சகம் பரிந்துரை!

தங்க நகைகளை அடகு வைப்பதில் பல்வேறு புதிய விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி,வங்கியில் அடமானம் வைக்கப்படும் தங்க நகையின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே கடன் வழங்க வேண்டும். நகைக்கான ஆதாரத்தை அப்போதே வழங்க வேண்டும். நகையின் தரம், தூய்மை குறித்த சான்று வழங்க வேண்டும் என்பது போன்ற கடுமையான விதிமுறைகள் இதில் அடங்கும். தங்க நகை கடனில் நடக்கும் முறைகேடுகளை தடுக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட இந்த புதிய விதிமுறைகளால், மக்கள் கடுமையாக பாதிப்பார்கள் என புகார்கள் எழுந்தன.எனவே, இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நகை கடனுக்கான புதிய கட்டுப்பாடுகளை திரும்ப பெற வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் ரிசர்வ் வங்கியை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதி அமைச்சகம் சில பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அதன்படி, ரூ. 2 லட்சத்துக்கும் குறைவான நகை கடன் பெறுபவர்களுக்கு புதிய விதிகளில் இருந்து தளர்வு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும் நகைக்கடன்களுக்கான புதிய விதிமுறைகளை வருகிற 2026 ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தலாம் என்றும் மத்திய நிதி அமைச்சகம் ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரைத்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்