Rock Fort Times
Online News

“நாயகன்” திரைப்படத்தின் மறு வெளியீட்டிற்கு தடை விதிக்க மறுப்பு… கமல் பிறந்தநாளில் ஐகோர்ட் உத்தரவு..!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த திரைப்படம் நாயகன். நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு படம் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், எஸ்.ஆர். ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.ஆர். ராஜன் என்பவர் நாயகன் திரைப்படத்தின் ரீ-ரிலீஸ்க்கு தடை விதிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவ்வழக்கில், நடிகர் கமல்ஹாசன் மற்றும் சரண்யா உள்ளிட்டோர் நடித்த நாயகன் திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை, தனது நிறுவனம் ஏ.டி.எம். ப்ரொடக்ஷன் நிறுவனத்திடமிருந்து கடந்த 2023ஆம் ஆண்டு பெற்றதாக அவர் தெரிவித்தார். இதனை மறைத்து, வி.எஸ். பிலிம் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் மூலம் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் நாயகன் திரைப்படம் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இது முறைகேடான நடவடிக்கை எனவும் அவர் கூறினார். எனவே, நாயகன் திரைப்படம் மறு வெளியீடு செய்யப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன்படி இன்று (நவ. 7) சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, நாயகன் திரைப்படத்தின் மறு வெளியீட்டிற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்