Rock Fort Times
Online News

தமிழகத்தில் 6 கட்சிகளின் அங்கீகாரம் ரத்தாகிறது?- விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது தேர்தல் ஆணையம்…!

தமிழகத்தில் 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாமல் இருக்கும் கட்சிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக, அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி என அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை துவக்கிவிட்டன. இந்நிலையில், தமிழகத்தில் 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத 6 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

சென்னை தேர்தல் அலுவலர் வரம்பிற்கு உட்பட்ட முகவரியில் கோகுல மக்கள் கட்சி, தேனாம்பேட்டை, சென்னை, இந்தியன் லவ்வர்ஸ் பார்டி, கோடம்பாக்கம், சென்னை, இந்தியன் மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், தி.நகர், சென்னை, மக்கள் தேசிய கட்சி, நுங்கம்பாக்கம், சென்னை, மனிதநேய மக்கள் கட்சி, வட மரக்காயர் தெரு. சென்னை, பெருந்தலைவர் மக்கள் கட்சி, அசோக்நகர், சென்னை ஆகிய 6 கட்சிகள் 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடவில்லை. மேற்கண்ட பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிகள் கடந்த 2019-ம் ஆண்டு முதல் 6 ஆண்டுகளாக எந்த ஒரு தேர்தலிலும் வேட்பாளர்களை போட்டியிட நியமிக்கவில்லை என்பதற்காக இந்த தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி, விசாரணை செய்து அறிக்கை அனுப்பி வைக்க தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட கட்சியினர் தலைமை தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் 26.08.2025-ம் தேதியன்று நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக காரணம் அளிக்க வேண்டும் என அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்