தேர்தலில் அடுத்தக்கட்ட முடிவு தொடர்பாக ஆலோசிக்க முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தேனியில் அவரச ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். பெரியகுளம் அருகே உள்ள தனது பண்ணை வீட்டில் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, தொண்டர்களின் விருப்பம் மற்றும் கருத்துக்களை துண்டு சீட்டில் எழுதித் தருமாறு ஆலோசனைக் கூட்டத்தில் ஓபிஎஸ் தெரிவித்தார். இதற்கு சில நிர்வாகிகள் ஆதரவும்,சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர். ஒரு சில நிர்வாகிகள் கூட்டணி குறித்து தாங்கள் எடுக்கும் முடிவுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் மாறி மாறி கருத்துக்களை கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், அதிமுகவை மீட்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. தேர்தலில் போட்டியிடுவதற்காக தொடங்கப்படவில்லை. ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டது யாருக்கு தொண்டர்களின் செல்வாக்கு உள்ளது என்பதை காட்டுவதற்காகத்தான். தனிக்கட்சி ஆரம்பிக்கும் எண்ணமோ, தேர்தலில் போட்டியிடும் எண்ணமோ தற்போது வரை இல்லை. அதிமுக ஒன்றிணைய நான் ரெடி. அதற்கு டிடிவி தினகரனும், அவருடைய அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமியும் ரெடியா? என்று கேட்டுச் சொல்லுங்கள்” எனத் தெரிவித்தார்.

Comments are closed.