Rock Fort Times
Online News

தீபாவளியை முன்னிட்டு வரும் ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும் – உணவுத்துறை அறிவிப்பு..

தீபாவளி பண்டிகை வரும் 12-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வரும் 5-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்படும் என தமிழக அரசின் உணவுத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி வாரத்தின் அனைத்து நாட்களிலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தீபாவளிக்காக பொதுமக்கள் முன்கூட்டியே பொருட்கள் வாங்குவார்கள் என்பதால் ரேஷன் கடைகளில் பொருட்களின் இருப்பை சரிபார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்