திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி, திருச்சி சரக டிஎஸ்பி சுதர்சன் அறிவுறுத்தலின்படி அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் ரோந்து பணியை தீவிர படுத்தியுள்ளனர். இந்நிலையில் போலீசாருக்கு இனாம் குளத்தூர் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. ரகசிய தகவலின் படி திருச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல் ஆய்வாளர் கோபிநாத், உதவி ஆய்வாளர் கண்ணதாசன் மற்றும் போலீசார் இனாம்குளத்தூரில் ஆய்வு நடத்தினர். சுப்பிரமணியன் மகன் தியாகராஜன் வயது 68 என்பவர் வீட்டில் கள்ளத்தனமாக ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்ததாக தெரிய வந்தது. அங்கு சோதனை செய்தபோது சுமார் 24 மூட்டைகளில் 50 கிலோ வீதம் 1200 கிலோ ரேஷன் அரிசி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் மாட்டு தீவனத்திற்கும் இரவு நேர டிபன் கடைகளுக்கும் கொடுப்பதாக அவர் கூறினார். எனவே காவல்துறையினா் அவரை கைது செய்தனர். கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசிகளை கிராமங்களில் இருந்து சேகரிக்க பயன்படுத்திய ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

