Rock Fort Times
Online News

மாநிலங்களவை தேர்தல்: தம்பிதுரை மற்றும் அன்புமணி வேட்பு மனு தாக்கல்…!

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்று(05-03-2026) கடைசி நாளாகும். தி.மு.க. கூட்டணியில் மொத்தமுள்ள 4 இடங்களில் தி.மு.க.-2, காங்கிரஸ்-1, தே.மு.தி.க.-1, அதேபோல் அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.க.-1, பா.ம.க.-1 இடங்களில் போட்டியிடுகின்றன. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய தீவிரம் காட்டுகின்றனர். அந்தவகையில், மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்காக பாமக தலைவர் அன்புமணி, அதிமுக வேட்பாளர் தம்பிதுரை ஆகியோர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்