Rock Fort Times
Online News

7 கோவில்களில் ரூ.36 கோடி செலவில் ராஜகோபுரம் கட்ட திருப்பணிகள்! அமைச்சர் சேகர்பாபு தகவல்!

சட்டசபையில் கேள்வி நேரத்தில், நன்னிலம் தொகுதி வாஞ்சிநாதசுவாமி கோவில் குடமுழுக்கு பணிகளை விரைவாக முடிக்க அரசு நடவடிக்கை எடுக்குமாஎனநன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் கேள்வி எழுப்பினார். இதற்குபதிலளித்து பேசியஅமைச்சர் சேகர்பாபு, தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் முதலமைச்சரின் அறிவுரைப்படி1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த 509 கோவில்களில் திருப்பணிகள் செய்வதற்கு100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 47 கோவில்களில் குடமுழுக்குக்கான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறினார். மேலும், கடந்தாண்டு திருப்பணிகளுக்காக 118கோவில்கள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக கூறிய அவர், நன்னிலம்தொகுதி வாஞ்சிநாதசுவாமி கோவிலில் 21கோடி ரூபாய் செலவில் 23 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குடமுழுக்கு திருப்பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என்றும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு
தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்