திருச்சியில் மழை: சாக்கடை நீருடன் மழை நீரும் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் அவதி… ( வீடியோ இணைப்பு)
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் வங்கக்கடலில் உருவான சுழற்சி காரணமாக தமிழகத்தில்
திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, உள்ளிட்ட18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தமிழக வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்த சூழலில் திருச்சி மாவட்டத்தில் இன்று(16-11-2024) காலை முதலே வானில் கரு மேகங்கள் சூழ்ந்து இருண்டு காணப்பட்டது. பின்னர் காலை 11 மணி முதல் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக திருச்சி மாநகரத்தில் மத்திய பேருந்து நிலையம், டிவிஎஸ் டோல்கேட், தில்லை நகர், உறையூர், சத்திரம் பேருந்து நிலையம், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் சாக்கடை நீரோடு மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சத்திரம் பேருந்து நிலையம் பாபு ரோடு அருகே முத்தழகு பிள்ளை தெருவில் ஆயிரத்திற்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.இந்தப் பகுதியில் மழை
நீரோடு சாக்கடை கலந்து குடிநீர் தொட்டியில் கலந்து செல்கிறது. திருச்சி மாநகரில் பல இடங்களில் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்தும் முறையாக மழை நீர் வடிகால் வசதி செய்யப்படாமல் இருப்பதால் குடிநீர் தொட்டியில் மழை நீரும், சாக்கடையும் கலந்து செல்வதால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதே போல சாலைகளில் பெருக்கெடுத்த மழை வெள்ளத்தால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Comments are closed.