தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் நேற்று(செப்.17) இரவு பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இரவு 7 மணிக்கு மழை பெய்யத் தொடங்கி இரவு 9 மணி வரை நீடித்தது. இதனால் மாநகரில் தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திருச்சி மத்திய பஸ் நிலையம், ஜங்ஷன், பாரதியார் சாலை, மன்னார்புரம், கருமண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் வெள்ள நீர் ஓடியது. இதேபோன்று மாவட்டத்தின் புறநகர் பகுதியிலும் மழை கொட்டியது. ஒரே நாளில் நேற்று மாவட்டம் முழுவதும் 316.2 மில்லி மீட்டர் மழை பதிவானது. அதிகபட்சமாக பொன்னணி ஆறு அணைக்கட்டுப் பகுதியில் 44.4 மில்லி மீட்டர் மழை பெய்தது. லால்குடி 22.4 ,தேவி மங்கலம் 5.4, சமயபுரம் 9 ,சிறுகுடி 3.6 ,வாத்தலை அணைக்கட்டு 6.6 , மணப்பாறை 5, கோவில்பட்டி 38.2 ,மருங்காபுரி 28.2, முசிறி 3 , புலிவலம் 2 ,நவலூர் குட்டப்பட்டு 26.5, துவாக்குடி 1.5, கொப்பம்பட்டி 12 ,பொன்மலை 12.8, திருச்சி ஏர்போர்ட் 21.2 ,திருச்சி ஜங்ஷன் 36.4 ,திருச்சி டவுன் 38 மில்லி மீட்டர் என மழை பதிவானது. திருச்சி மாவட்டத்தில் மதிய நேரங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. இந்த மழையின் காரணமாக இரவு குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.
Comments are closed.