Rock Fort Times
Online News

தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கான காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு…!

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். அதில், காலாண்டு தேர்வு 1 முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செப்டம்பர் 18ம் தொடங்கி செப்டம்பர் 26ம் தேதி வரை நடைபெறுகிறது. செப்டம்பர் 27ம் தேதி முதல் அக்டோபர் 7ம் தேதி விடுமுறை கிடைக்கிறது. அதாவது காலாண்டு விடுமுறை மொத்தம் 11 நாட்கள் கிடைக்கிறது. இந்த 11 நாட்கள் விடுமுறையில் ஆயுத பூஜை, விஜய தசமி மற்றும் காந்தி ஜெயந்தி வருகிறது.
அதேபோல் அரையாண்டு தேர்வு டிசம்பர் 15ம் தேதி தொடங்கி டிசம்பர் 23ம் தேதி வரை நடைபெறுகிறது. 24ம் தேதி முதல் ஜனவரி 4ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுகிறது. மொத்தம் 12 நாட்கள் அரையாண்டுத் தேர்வு விடுமுறை வருகிறது. இதில், கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு வருகிறது. இதுதொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் பக்கத்தில், கடந்தாண்டு போலவே 2025-2026ம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும். இத்துடன் பள்ளிக் கல்வித்துறையின் (2025-2026) நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள காலாண்டு/அரையாண்டுத் தேர்வுக்கான தேதிகள் அடங்கிய பக்கங்களை இணைத்துள்ளோம். மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தன்னம்பிக்கையோடு தயார் ஆகுங்கள் என்று வாழ்த்து கூறியுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்