Rock Fort Times
Online News

முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் புஸ்ஸி ஆனந்த் மனுத்தாக்கல்…!

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் மதியழகன் மற்றும் சிலர் மீது முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் மீது 5 பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட இந்த முதல் தகவல் அறிக்கை கரூர் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-1 கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. கரூர் மாவட்ட தவெக செயலாளர் மதியழகன், கரூர் மாவட்ட நிர்வாகி புவன் ராஜ் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். தற்போது நீதிமன்றத்திற்கு தசரா விடுமுறை என்பதால் வரும் வெள்ளிக்கிழமை இந்த மனுக்கள் விசாரணைக்கு வரும் எனத்தெரிகிறது. அதுபோல கைதான மதியழகன், பவுன்ராஜும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யவுள்ளதாக சொல்லப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்