Rock Fort Times
Online News

சாலைகளை சீரமைக்ககோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்…!

திருச்சி மாநகர பகுதிகளில் தரமற்ற நிலையில் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். திருச்சி – கரூர் தேசியநெடுஞ்சாலையில் உள்ள வாய்க்கால் பாலத்தை புதிய பாலமாக மாற்றியமைக்க வேண்டும். அண்ணா சிலை முதல் திருச்சி – கரூர் தேசியநெடுஞ்சாலை வரை புதிய தார் சாலை அமைத்திட வேண்டும்.
அண்ணா சாலையை கடப்பதற்கு சிரமமாக உள்ள இரண்டு தடுப்பு சுவர்களையும் அகற்ற வேண்டும். அண்ணா சிலை முதல் சத்திரம் பேருந்து நிலையம் வரை உள்ள ஒரு வழி பாதையை இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் இருவழிப்பாதையாக மாற்றித்தர வேண்டும். அண்ணா சாலையை கடப்பதற்கு நடைபாலம் அல்லது பாதசாரிகள் கடக்க ஏதுவாக போக்குவரத்து சிக்னல்கள் அமைத்து தர வேண்டும்.

அண்ணா சாலை அருகில் அமைந்துள்ள இரண்டு மதுபான கடைகளையும் அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சரவணன், முத்துக்குமார், விக்டர், செந்தில்நாதன், எஸ்.எம்.சேட்டு, கலைமணி, நவீன், மனோகரன், கங்கை செல்வன், ஜெயராமன், ரவி, இப்ராம்ஷா உள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்களும் மற்றும் பொதுமக்களும் ஆர்ப்பாட்டம் செய்தனர்

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்