Rock Fort Times
Online News

திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்…

முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு..

அதிமுக 52 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வழிகாட்டுதலின்படி தமிழகமெங்கும் அதிமுக பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பெட்டவாய்த்தலை அண்ணா பேருந்து நிலையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி சிறப்புரை ஆற்றினார்.

           

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி, கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வளர்மதி, மாநில எம்ஜிஆர் இளைஞரணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சிவபதி, எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் பொன் .செல்வராஜ், முன்னாள் அரசு கொறடாவும், அமைப்புச் செயலாளருமான மனோகரன், முன்னாள் அமைச்சர் பூனாட்சி, மாவட்ட சிறுபான்மை நல பிரிவு செயலாளர் புல்லட்ஜான், மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான அய்யம்பாளையம் ரமேஷ், மாவட்ட கழக அவை தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பிரின்ஸ் தங்கவேல், எனர்ஜி அப்துல் ரஹ்மான், தலைமை கழக பேச்சாளர் சாரதா, அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கோப்பு நடராஜ், அந்தநல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கடிகை ராஜகோபால், சிறுகமணி பேரூர் கழகச் செயலாளர் கே.வி .செந்தில்குமார், இளைஞர்- இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் சோனா விவேக், மாவட்ட பிரதிநிதி கே.வி.ரகுபதி, முத்தரசநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆதிசிவன், அந்தநல்லூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் பி.எம்.கதிர்வேல், மீனவர் அணி செயலாளர் பேரூர் கண்ணதாசன், முன்னாள் ஒன்றிய இணைச் செயலாளர் ராஜா, சிறுகமணி நகர அவை தலைவர் கனகராஜ், ஒன்றிய மீனவர் அணி செயலாளர் பெருமாள், ஒன்றிய சிறுபான்மை தலைவர் பக்தி நாதன், அந்தநல்லூர் ஒன்றிய இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சபாஷ் என்ற ராமச்சந்திரன், தேவஸ்தானம் சந்தோஷ்குமார், சிறுகமணி கண்ணன், ஊராட்சி செயலாளர் கோபால், கிளைக் கழகச் செயலாளர்கள் கண்ணன் என்ற சுப்பிரமணி, ராமமூர்த்தி, சுரேஷ், சக்திவேல், ரஞ்சித், அரசகுமார், ரவி, வார்டு உறுப்பினர்கள் சக்திவேல், ரயில்வே செல்வராஜ், மகாமுனி மற்றும் மாவட்ட, ஒன்றிய பேரூர், நகர கிளைக் கழக வார்டு நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், இளைஞர் இளம் பெண்கள் பாசறை மற்றும் அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்