Rock Fort Times
Online News

கிராம சபை கூட்டத்திற்கு உரிய ஏற்பாடு செய்யாததால் பொதுமக்கள் அதிருப்தி…!

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தளுகை ஊராட்சி செயலராக இருப்பவர் பிரகாஷ். இவர் வெங்கடாசலபுரம் ஊராட்சி பொறுப்பு செயலராகவும் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மே தினத்தை முன்னிட்டு இன்று(01-05-2025) வெங்கடாசலபுரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஊராட்சி செயலர் இல்லாத காரணத்தினால் அவருக்கு பதிலாக உதவி பிடிஓ குமார் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், காலை 11 மணியை கடந்தும் கிராம சபை கூட்டம் கூடவில்லை. கிராமமக்கள் அமர பந்தல் வசதியும் செய்யப்படவில்லை. மேலும், வெயில் அதிகரித்த நிலையில் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் கலைந்து செல்ல முயன்றனர். இதனை பத்திரிகையாளர்கள் சுட்டிக்காட்டியதும் அவசர, அவசரமாக சாமியானா பந்தல் அமைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து காலை 11-30 மணி அளவில் கிராம சபை கூட்டம் தொடங்கியது.
மே 1ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டும் தேவையான முன்னேற்பாடு பணிகளை செய்யாதது ஏன் என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்