10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 17 மற்றும் 18 தேதிகளில் மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம்…! * தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அறிவிப்பு!
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மாநில கூட்டம் திருச்சியில் இன்று( ஜூலை 12) நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின் அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மயில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். இது தொடர்பாக ஆராய தமிழ்நாடு அரசு சார்பில் மூன்று நபர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு முழுமையாக செயல்பட்டதாக தெரியவில்லை. அதனை காரணமாக வைத்து அந்த குழுவின் கால அளவை நீட்டிக்க கூடாது. இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும். ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை தடுக்கும் அர்சாணை 243 ஐ ரத்து செய்ய வேண்டும். ஊதிய முரண்பாட்டை கலைய வேண்டும்.
தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு தணிக்கை தடை என்கிற பெயரில் அவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள். அதனை திரும்ப பெற வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அதில் நிரந்தர பணியில் ஆசிரியர்கள் அமர்த்தப்பட வேண்டும். ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறுவது தொடர்பான தகுதி தேர்வு வழக்கு உச்ச நீதிமன்றத்திக் நிலுவையில் உள்ளது. அதனை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 17 மற்றும் 18 ஆகிய இரண்டு தினங்கள் மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.
Comments are closed.