Rock Fort Times
Online News

தொழிற்சங்க நிர்வாகிகள் பணியிட மாற்றத்தை கண்டித்து மத்திய கூட்டுறவு வங்கி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்…!

மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்கிட வேண்டும். வங்கி மேலாளர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை நிவர்த்தி செய்து வழங்க வேண்டும். தட்டச்சு பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தேர்வு நிலை மற்றும் சிறப்பு ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். வங்கி பணியாளர்களுக்கு பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதி ஆன்லைனில் நேர் செய்யப்படாமல் உள்ளதை விரைந்து நேர் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து பேசி கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும். தொழிற்சங்க செயல்பாட்டை முடக்கும் வகையில் பழி வாங்கும் நோக்கத்துடன் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட பணியிட மாறுதல் உத்தரவை உடனே ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய கூட்டுறவு வங்கி அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருச்சியில் இன்று(30-04-2025) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்கம் கோபிநாத் தலைமை வாங்கினார். வங்கி ஊழியர்கள் சங்கம் ரகுராமன் ,வங்கி ஊழியர் பேரவை கலியமூர்த்தி, வங்கி பணியாளர்கள் சங்கம் கதிரவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அனைத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் வங்கி ஊழியர்கள் சங்கம் ஜெகநாதன் நன்றி கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்