Rock Fort Times
Online News

கார்ப்பரேட் நிறுவனங்கள் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடுவதை கண்டித்து ஆகஸ்ட் 30ம் தேதி போராட்டம்..!- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்ரமராஜா திருச்சியில் பேட்டி…

அமேசான், பிளிப்கார்ட், டிமார்ட் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆன்லைன் மற்றும் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடுகின்றன. இதனால் ஆயிரக்கணக்கான சிறு வணிகர்கள் வாழ்வாதாரம் இழந்து கூலி வேலைக்கு செல்லும் அபாய நிலை ஏற்படுகிறது. எனவே இதை கண்டித்து வருகிற ஆகஸ்ட் 30ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள வணிகர்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்ரம்ராஜா திருச்சியில் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது.,

நாடு முழுவதும் சில்லறை வணிகம் அழிந்து கொண்டிருக்கிறது. அமேசான் பிளிப்கார்ட், ரிலையன்ஸ், டி மார்ட் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் சில்லறை வணிகத்தை கபளிகரம் செய்து வருகிறது. இதிலிருந்து வணிகர்களை மீட்பதற்கும், நாட்டின் பொருளாதாரத்தை பேணி காக்கவும் தார்மீகப் போராட்டத்தை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கையில் எடுத்துள்ளது. கார்ப்பரேட் வணிக நிறுவனங்கள் பல்வேறு சூழ்ச்சிகளை செய்து மக்களை ஏமாற்றுகிறார்கள். அந்த சூழ்ச்சிகள் அனைத்தும் ஒழித்துக் கட்டப்பட வேண்டும். டி- மார்ட் போன்ற நிறுவனங்களுக்கு மொத்த விற்பனை செய்யதான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுவும், அந்நிறுவனங்கள் நகர் புறப்பகுதிகளுக்கு வெளியே தான் இருக்க வேண்டும் என விதி உள்ளது. ஆனால் இவற்றையெல்லாம் புறம் தள்ளி கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுடைய லாபியை பயன்படுத்தி நகர்ப்புற பகுதிகளில் தங்களது வணிக நிறுவனங்களை அமைத்து வருகிறார்கள். இது போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களால் தமிழகத்தில் 20 சதவீத சிறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. எனவே இந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் தனிக்கவனம் செலுத்தி வியாபாரிகளை பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். டி மார்ட் போன்ற பெரிய கார்ப்பரேட் நிறுவனம் ஒரு பகுதிக்கு வந்தால் அதை சுற்றியுள்ள 15 கிலோமீட்டர் தூரத்திற்கு உள்ள வியாபாரிகள் 8 முதல் 9 மாதங்களில் முழுமையாக தங்களது வியாபாரத்தை காலி செய்வதோடு வாழ்வாதாரத்தை இழந்து நிற்கதியாக நிற்கின்றனர். எனவே இம்முறை ஒழித்துக் கட்டப்பட வேண்டும் இதை வலியுறுத்தி வருகிற 30ம் தேதி மிகப்பெரிய போராட்டம் நடத்த தீர்மானித்திருக்கிறோம் என்றார். இப்பேட்டியின்போது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் வீ.கோவிந்தராஜுலு, மாவட்டத் தலைவர் ஸ்ரீதர்,மாநகரத் தலைவர் எஸ். ஆர்.வி. கண்ணன், மாவட்டச் செயலாளர் செந்தில் பாலு,மாவட்ட பொருளாளர் வெங்காயமண்டி தங்கராஜ், மாநகர செயலாளர் ஏ- ஒன் ஹோட்டல் ஆறுமுகப்பெருமாள்,மாநிலத் துணைச் செயலாளர் திருப்பதி,தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க மாநிலத் தலைவர் தில்லை மெடிக்கல்ஸ் மனோகரன்,பேரமைப்பு இளைஞரணி மாவட்ட தலைவர் ஏ.எம்.பி. அப்துல் ஹக்கீம்,மாவட்ட இளைஞரணி செயலாளர் கே. எம். எஸ் .மைதீன், அஸ்வினி மோகன்,மாவட்டத் துணைத் தலைவர் எஸ் .ஏ.ரஹீம்,தமிழ்நாடு நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு தலைவர் எஸ்.கந்தன்,மாநில பொதுச் செயலாளர் அன்பழகன்,செய்தி தொடர்பாளர் திருமாவளவன்,டோல்கேட் ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்