Rock Fort Times
Online News

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம்…!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் எஸ்.ஐ.ஆர். பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை கைவிட கோரியும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று(11-11-2025) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல,

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன், ஸ்டாலின்குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாமன்ற உறுப்பினர் மு.மதிவாணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், சக்தி ஆற்றலரசு, வழக்கறிஞர் கலைச்செல்வன், குருஅன்புசெல்வம், நிர்வாகிகள் ஜெயக்குமார், கஸ்தூரி, சிறுத்தை குணா, காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர்கள் ரெக்ஸ், கலை, வழக்கறிஞர் பி.கோவிந்தராஜன், மதிமுக சார்பில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம், மனிதநேய மக்கள் கட்சியின் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது, இ.கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வராஜ். சிவா, சுரேஷ்முத்துசாமி மாமன்ற உறுப்பினர் சுரேஷ் , ம.கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஸ்ரீதர் உட்பட கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டு தேர்தல் ஆணையத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்