Rock Fort Times
Online News

நீட் தேர்வை எதிர்த்து திருச்சியில் தி.க. இளைஞரணி ஆர்ப்பாட்டம்…!

நீட் தேர்வை எதிர்த்தும், மத்திய அரசை கண்டித்தும் திராவிடர் கழக இளைஞரணி சார்பில் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இன்று ( 22.08.2023 ) கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட மாணவரணி தலைவர் அறிவுச்சுடர் தலைமை தாங்கினார். திராவிடர் கழக இளைஞரணி தலைவர் தேவா வரவேற்றார். தலைமைக் கழகச் சொற்பொழிவாளர் பூவை புலிகேசி சிறப்புரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ், மாவட்ட செயலாளர் மோகன்தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர். முடிவில் மாவட்ட மாணவர் அணி செயலாளர் கோகுல் நன்றி கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்