திருச்சியில் நாளை (அக். 17) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்…* வேலை வாய்ப்பற்றோர் பயன்படுத்திக் கொள்ள கலெக்டர் வேண்டுகோள்!
படித்த பல பேருக்கு சரியான வேலை அமைவதில்லை. அவ்வாறு உள்ளவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படுகின்றன. அந்தவகையில் திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் நாளை (அக்.17) தனியார் துறை சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளன. இம்முகாமில் பல்வேறு தனியார் துறைகளைச் சார்ந்த 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். மேலும், இம்மாவட்டத்திலுள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 10ம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, ஐ.டி.ஐ, இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரிகள் மற்றும் பொறியியல் படிப்புகள் போன்ற கல்வித்தகுதி உடைய 18 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட வேலை தேடுவோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தங்களுடைய பயோடேட்டா மற்றும் அனைத்து கல்விச்சான்றுகளின் நகல்கள், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் நாளை வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் திருச்சி, கண்டோன்மென்ட், பாரதிதாசன் சாலை, மேற்கு தாலுக்கா அலுவலகத்தின் பின்புறம் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் வந்து கலந்து கொண்டு பயன் பெறலாம். மேலும், தகவல்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 0431-2413510, 9499055902 என்ற தொலைபேசி அலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments are closed.