திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 1500-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையின் நுழைவு வாயிலில் சிறை நிர்வாகத்தால் நடத்தப்படும் சிறப்பு அங்காடி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு உணவு பொருட்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது. சிறை கைதிகளை கொண்டே அந்த அங்காடி நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று (ஜூலை 11) அந்த உணவகத்தில் பணியாற்ற சிறை காவலர் தினேஷ் என்பவர் 6 கைதிகளை உணவகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த கைதிகளில் ராஜேந்திரன் என்பவர் நைசாக தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து போலீசார் ராஜேந்திரனை தீவிரமாக தேடும்பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் திருச்சி சின்ன சூரியூர் அருகே பதுங்கி இருந்த ராஜேந்திரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Comments are closed.