முதுமலை யானைகள் காப்பகத்திற்கு சென்ற பிரதமர் மோதி யானைகளை நலம் விசாரித்ததோடு கரும்புகளை ஊட்டிவிட்டு மகிழ்ந்தார்.
கர்நாடகா மாநிலம் பந்திப்பூரில் இருந்து சாலை மார்க்கமாக வந்த பிரதமர் மோடி, முதுமலை வந்தடைந்தார்.
இதையடுத்து தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு வந்த பிரதமர், வளர்ப்பு யானைகளுக்கு கரும்பு அளித்து மகிழ்ந்தார்.

முகாமில் பராமரிக்கப்படும் யானைகளை பார்வையிட்டார். ஆஸ்கர் விருது பெற்ற தம்பதி தெப்பக்காடு பொம்மன்-பெள்ளியை பிரதமர் மோடி சந்தித்தார்.


ஆவண குறும்படத்தில் நடித்த யானையையும் அவர் பார்வையிட்டார். டி23 புலியை உயிருடன் பிடிக்க உதவிய பழங்குடியின வனத்துறை ஊழியர்களை
பிரதமர் சந்திந்தார். பிரதமர் வருகையையொட்டி முதுமலை, கூடலூர், மசினகுடி உள்ளிட்டபகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
