மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களிடம் தொலைபேசியில் நலம் விசாரித்த பிரதமர் மோடி…
மீட்பு குழுவினருக்கும் பாராட்டு...
உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டம் சில்க்யாரா அருகே கடந்த 12ம் தேதி சுரங்கத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கினர். அவர்களை உயிருடன் மீட்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. சுரங்கத்தில் சிக்கி தவித்தவர்கள் இருக்கும் இடம் கண்டறியப்பட்டு அவர்களுக்கு குழாய் மூலம் உணவு வழங்கப்பட்டது. அவர்களை மீட்க கடந்த 17 நாட்களாக மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வந்தன. இந்நிலையில் நேற்று 41 பேரும் மீட்புக் குழுவினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு முழு உடல் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று ( 29.11.2023 ) காலை 41 தொழிலாளர்களிடமும் தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார். மேலும், அவர்களை பத்திரமாக மீட்ட மீட்புக் குழுவினரை பாராட்டிய பிரதமர், ‘சுரங்கத்தில் இருந்து, தொழிலாளர்களை மீட்டது உணர்ச்சிபூர்வமானது. சுரங்கத்தில் இருந்து தொழிலாளர்களை மீட்க அயராது உழைத்த மீட்புக் குழுவினருக்கு பாராட்டுகள். தொழிலாளர்களின் மன உறுதியும், வலிமையும் ஊக்கம் அளிக்கிறது. தொழிலாளர்களின் குடும்பங்கள் காண்பித்த பொறுமையும் தைரியமும் மிகவும் பாராட்டத்தக்கது என்று தெரிவித்தார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.