பழைய ஓய்வூதிய திட்டம், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி
தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) சார்பில் மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட தலைநகரங்களில் மூன்று நாள் தொடர் மறியல் போராட்டம் தொடங்கியது. இரண்டாவது நாளான இன்று (ஜூலை 17) சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அதேபோல திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன் தலைமை தாங்கினார். மாநில துணைப் பொதுச் செயலாளர் நாகராஜன், மாவட்ட செயலாளர்கள் செல்வகுமார், அந்தோணி, எட்வர்ட் ராஜ், கல்யாணி, சந்திரசேகர், பொன்னுசாமி, ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், திரளான தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அப்போது மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.

Comments are closed.